வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. மூதாட்டி அதிரடி கைது கைது !

வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. மூதாட்டி அதிரடி கைது கைது !

வாடகை வீட்டில் பாலியல் தொழில்.. மூதாட்டி அதிரடி கைது கைது !
X

புதுக்கோட்டை வடக்கு நாலாம் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கணேஷ் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கணேஷ் நகர் போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் தொழில் நடப்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 6 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண்களை மீட்டு காப்பத்தில் ஒப்படைத்தனர். மேலும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதே பகுதியைச் சேர்ந்த சாரதா(60) என்ற மூதாட்டியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அருண் (31), வீரன்(55) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழில் நடந்த வீட்டின் உரிமையாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இளம் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it