பள்ளி வாட்ஸ்ஆப் குரூப்பில் செக்ஸ் வீடியோ.. தலைமை ஆசிரியை அதிர்ச்சி.. கணக்கு வாத்தியாரின் சேட்டை !
சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கான கணித ஆசிரியராக மதிவாணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
இதற்காக ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்காக பள்ளியின் சார்பில் வாட்ஸ்அப் குரூப்பும் உள்ளது. இதில் பள்ளியின் சார்பாக ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கான வினாத்தாள்கள் வீட்டுப்பாடங்கள் உள்ளிட்டவைகளை பகிர்ந்து வருகின்றனர். 30 மாணவிகள் 30 மாணவர்கள் பள்ளியின் முதல்வரும் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வாட்ஸ்அப் குரூப்பில் திடீரென இரண்டு ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டது.

இதனை பார்த்த மாணவ, மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளியின் முதல்வர் அந்த குரூப்பில் இருப்பதால் அவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் குரூப்பில் ஆபாச படங்களை பகிர்ந்தது கணித ஆசிரியர் மதிவாணன் என்பதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து பள்ளியின் முதல்வர் ஆசிரியர் மதிவாணணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் தவறுதலாக ஆபாச வீடியோவை ஆசிரியர் மதிவாணன் பகிர்ந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மதிவாணனை பள்ளி நிர்வாகம் உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளனர்.

அதோடுமட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம் உடனடியாக இது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆசிரியர் மதிவாணன் மீது புகார் அளித்தது. அதன்பேரில் தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர் மதிவாணன் மீது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
newstm.in