1. Home
  2. தமிழ்நாடு

ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம்.. ஆய்வில் கிடைத்த நல்ல முடிவு !!

ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம்.. ஆய்வில் கிடைத்த நல்ல முடிவு !!


நாடு முழுவதும் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், மக்கள் பெரும் அச்சமும் விரக்தியும் அடைந்துள்ளனர். கொரோனாவுடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து பரவுவதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த ஆய்வில் தற்போது நல்ல தகவல் கிடைத்துள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதும் அல்லது முன்னதாகவே கொரோனா பாதிப்புக்குள்ளானதும், பல மடங்கு உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருகிறதோ இல்லையோ, ஆனால், ஒமைக்ரான் பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமானது 4 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது. டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை சார்பில், நாட்டில் முதல் முறையாக ஒமைக்ரான் பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் இது தெரியவந்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம்.. ஆய்வில் கிடைத்த நல்ல முடிவு !!

மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளில், டெல்லியின் ஐந்து மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் 264 மாதிரிகள் மரபணு மாற்ற வரிசைமுறை சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அதில், 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் இரண்டாம் அலை உருவாகக் காரணமான டெல்டா வகை வைரஸ் பாதித்திருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அளவு சிறியதாக இருந்தபோதிலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக அதிகரித்திருந்ததை உறுதி செய்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம்.. ஆய்வில் கிடைத்த நல்ல முடிவு !!

மேலும், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 82 பேர் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள். அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். ஆனால், இவர்களில் வெறும் மூன்று பேர் மட்டும்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்குச் சென்றனர். அவர்கள் மூன்று பேரும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தவர்கள். ஆனால் யாருக்கும் ஐசியுவில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கொரோனா இரண்டாம் அலையின்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை இருப்போர் விகிதம் 20-23% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Trending News

Latest News

You May Like