பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி நடத்தியது 'செட் அப்' தாக்குதல் !! ரவி நாயர்

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி நடத்தியது 'செட் அப்' தாக்குதல் !! ரவி நாயர்

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி நடத்தியது செட் அப் தாக்குதல் !! ரவி நாயர்
X

நேற்றிரவு தான் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டிய, நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய 'செட் அப்' தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் சொல்லி இருப்பது ட்ரெண்டிங்காகி வருகிறது.

அர்னாப் அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதாரே ஆகியோர் காரில் ஸ்டுடியோவில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. இது குறித்து அர்னாப் வெளியிட்ட வீடியோவில் காங்கிரஸ் தலைவர்களை இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டியுள்ளார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை "கோழை" என்று கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இந்நிலையில், இது அர்னாப் மீது அர்னாபே நடத்திய 'செட் அப்' தாக்குதல் என்று ரவி நாயர் என்ற பத்திரிகையாளர் பதிவிட்டுள்ளதாவது ; "அர்னாப் தனது வீடியோவில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் இரண்டு பேர் தன்னை தாக்கியதாக ஆவேசமாக கூறுகிறார். அதாவது அவர் பேசியதுபடி, இன்று 23 ஆம் தேதி விடியும் முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அவரது வீடியோவில் பதிவாகியுள்ள Metadata படி அந்த வீடியோ எடுக்கப்பட்ட நேரம் நேற்று 20:17 மணி ஆகும்.

அதாவது 22 ஆம் தேதி முன்னிரவு 8:17 மணிக்கு, தன் மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தியை குற்றம்சாட்டி அவர் ஆவேசமாக பேசிய வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எனவே இது அர்னாப் மீது அர்னாப் நடத்திக் கொண்ட செட் அப் தாக்குதல் என்பது வெளிப்படியாக் தெரிகிறது. அவர் இவ்வாறு கூறி இருப்பதாக  பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

NewsTm.in

Next Story
Share it