1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிகளில் 'ப' வடிவிலான வகுப்பறை அமைப்பது சோதனை முயற்சி தான் - அமைச்சர் அன்பில் மகேஷ்..!

1

காஞ்சீபுரம் மவாட்டம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் நடந்த தலைமை ஆசிரியர்கள் உடனான கலந்தாய்வு கூட்டங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

மாணவர்களின் புரிதல் திறனை அறியவே, அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. கேள்வி கேட்கும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும். அதுபோல், தான் கற்றதை, பிற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரி யர்களாகவும் அவர்களை உருவாக்க 'வேண்டும். சில மாவட்டங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் உயர்ந்திருந்தா லும், அடைவுத்திறன் தேர்வில் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரை யாட வேண்டும்.போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள பகுதி நேர ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள னர். முதல் - அமைச்சர் இது தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பார். தற்போது 'ப'வடி விலான வகுப்பறை அமைப்பது, சோதனை முயற்சி தான். பயனுள்ள இடங்களில் பயன் படுத்திக் கொள்ளலாம். அரசாணை எதுவும் பிறப்பிக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like