1. Home
  2. தமிழ்நாடு

சர்வர் பிரச்சனை...வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு ஆகுமா ?

1

2023-24ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை (ஐடிஆர்) ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதனால் தற்போது வருமான வரி செலுத்துவதற்கான இணையதளம் சென்று பலரும் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வருமான வரி தாக்கலுக்கு கடைசி தேதி நெருங்கும் நிலையில் நேற்று முதல் வருமான வரித்துறையின் இணையதளம் சரியாக செயல்படாத நிலையில் உள்ளது. அதாவது நேற்று முதல் இன்று வரை ஏராளமானவர்கள் வருமான வரி தாக்கல் செய்யும்போது சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது சில தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பலரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இதனால் பலரும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் பலரும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதியை மத்திய அரசு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். ஆனால் தற்போது வரை வருமான வரித்துறை சார்பில் காலக்கெடு நீட்டிப்பு தொடர்பாக எந்த புதிய அறிவிப்பும் வெளியாகவில்லை

Trending News

Latest News

You May Like