மதுரையில் நிகழும் தொடர் கொலைகள்..! மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள்ளேயே பெண் ஊழியர் வெட்டி படுகொலை..!
மதுரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் கொலை நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
70 வயது மதிக்கதக்க மருத்துவமனை ஊழியர் முத்துலெட்சுமி என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் காதில் அணிந்திருந்த நகைகள் காணாமல் போன நிலையில் நகைக்காக கொலையா, அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் என மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நகைக்காக மூதாட்டிகள் கொல்லப்படுவதாக கூறப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஜூலை 8ஆம் தேதி மதுரை திருமங்கலம் வாகைக்குளம் மாயன்நகர் பகுதியில் காசம்மாள் என்ற 70 வயது மூதாட்டி 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டார்.
நேற்று ஜூலை 11ஆம் தேதி மதுரை மேலூர் கச்சிராயன்பட்டியில் பாப்பு என்ற 60 வயது பெண்மணி கொலை செய்யப்பட்டார்.
விரகனூர் பகுதியில் தோப்புக்குள் 56 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்த நிலையில் பரபரப்பாக இயங்கும் மருத்துவமனைக்குள் இன்று மேலும் ஒரு மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.