வயதானவர்களின் தொடர் படுகொலை பலத்த கேள்விகளை எழுப்புகிறது: அண்ணாமலை..!

பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை;
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற தாயார், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே இது போன்ற குற்றங்களுக்காக, சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், மறுபடியும், தனியாக வசித்து வரும் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்வது, பலத்த கேள்விகளை எழுப்புகிறது.
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இது போன்ற குற்றங்கள் தொடராமல் தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.