கார் டிரைவருடன் சேர்ந்து களவாணித்தனம் செய்த சீரியல் நடிகை!

வசதியாக வாழ்வதற்கு கார் டிரைவரான கணவர் வீட்டில் கொள்ளை அடித்துவிட்டு தலைமறைவாக உள்ள சீரியல் நடிகையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டு சென்னை வந்த சீரியல் நடிகைகளை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்லும் கார் ஓட்டுநரான பணியாற்றி வந்தார்.
அப்போது தெய்வமகள் சீரியலில் நடிக்கும் சுசித்ரா உடன் பழக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கொரோனா காலத்தில் ஷூட்டிங் இல்லாததால் இருவரும் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளனர்.
சில தினங்ளுக்கு முன் மணிகண்டன் தனது சொந்த ஊருக்கு சுசித்ராவை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் பணம், நகை இருப்பதை பார்த்த சுசித்ரா அதை திருட திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
பின்னர் மணிகண்டன் சுசித்ராவை சென்னையில் விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்று 18 சவரன் நகை, 50 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார். திருடிய நகைகளை விற்ற பணத்துடன் அவரை போலீஸார் கைது செய்தனர். மணிகண்டனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனிடையே சுசித்ரா சாதுர்யமாக தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விசாரணையில் நடிகை சுசித்ராவின் உண்மை பெயர் பரமேஸ்வரி என தெரியவந்துள்ளது.
newstm.in