1. Home
  2. தமிழ்நாடு

47-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக வங்கியின் கணக்கு தொடர்பாக ஆவணங்களை கேட்டு அமலாக்கத்துறை வங்கிக்கு அனுப்பிய கடிதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி அந்த ஆவணங்களை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்காக செந்தில் பாலாஜியை நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிடிருந்தார். இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

அவருக்கு அந்த வங்கி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையானது ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றைக்கு முடிவடைந்ததையடுத்து, அவரது நீதிமன்ற காவலையும் ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47-வது முறையாக நீட்டிக்கப்படிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like