1. Home
  2. தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிப்பு!

1

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான சில நாட்களில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறையில் இருந்தபடியே இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வங்கி ஆவணங்களை வழங்க கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார். அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் நேற்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.

கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக, ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Trending News

Latest News

You May Like