மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார் செந்தில் பாலாஜி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை அனுப்பர்பாளையத்தில் கலைஞர் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கோவை நூலகம் 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்றும், கோவை நூலகம் கம்பீரமாக மிகச் சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து இருக்கிறார் என்றும், சிறப்பாக செயல்பட்ட செந்தில்பாலாஜிக்கு இடையில் சில தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்