1. Home
  2. தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவிர வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.!

1

புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்தவித சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை. முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவிர,  வேறு எந்த சலுகைகளும் செந்தில் பாலாஜிக்கு சிறைத்துறை சார்பில் வழங்கப்படவில்லை. கோடநாடு வழக்கில் யார் யாரெல்லாம் தவறு செய்தார்களோ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். 

senthil balaji

தொடர்ந்து பேசிய அவர்,  அம்பேத்கர் படம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.  முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தலைமை நீதிபதி சந்தித்து கலந்து ஆலோசித்தேன்.  அம்பேத்கர் படம் உள்ளிட்ட எந்த புகைப்படங்களையும் நீதிமன்றங்களில் இருந்து அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு எடுத்து சொல்லி விடுங்கள் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.  ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது வாடிக்கையானது.விலைவாசி உயராத அளவு தமிழக அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஒரு சிலர் காய்கறிகளை பதுக்குவதாக தகவல் கிடைக்கிறது. அது சரி செய்யப்படும் என்றார்.

Trending News

Latest News

You May Like