1. Home
  2. தமிழ்நாடு

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை எப்போது ? இன்று முடிவு

1

செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதைத் தொடர்ந்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக உள்ளார்” எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டு “அதற்கு சனிக்கிழமை விசாரிக்கலாமே” எனக் கேட்டார்.

இதையடுத்து வழக்கை எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என இன்று முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Trending News

Latest News

You May Like