1. Home
  2. தமிழ்நாடு

ஓபிஎஸ் சகோதரர் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!

1

கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்துக்கும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு டிச.7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோயில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகர சபை தலைவராகவும் இருந்த ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் இந்த வழக்கு, திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே பாண்டி இறந்துவிட்டார். மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை, தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.ராஜா, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகியோர் நிபந்தனையற்ற ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் 23 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 சாட்சியங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு நவ.13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like