நெல்லையில் பரபரப்பு..! கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு..!
திருநெல்வேலி - தென்காசி சாலையில் அமைந்துள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகம். இந்த பல்கலைகழகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி, துணை வேந்தர் சந்திரசேகர், உயர் அதிகாரிகள் மற்றும் பேராசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி அனைத்து மாணவிகளுக்கு பட்டத்தை வழங்கி வந்தார். இந்த நிலையில்,ஆராய்ச்சிக்காக பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த ஜுன் ஜோசப் என்ற மாணவி, கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பட்டத்தை காட்டி வாழ்த்து பெறாமல் துணை வேந்தர் சந்திரசேகரிடம் காட்டி வாழ்த்து பெற்றுவிட்டு மேடையில் இருந்து இறங்கி சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி அருகில் வந்து நிற்கும்படி கோரிக்கை விடுத்தும், அவரின் அழைப்பை மாணவி ஜீன் ஜோசப் கண்டுகொள்ளவில்லை.
இதனால், கவர்னர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாது, விழா மேடையில் இருந்தவர்களும், பட்டம் பெற வந்த மாணவ-மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த சம்பவம் பல்கலைகழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அந்த மாணவி, நான் திராவிட சிந்தாந்த்தை பின்பற்றுபவள். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒன்று செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பாட்டம் வாங்க வேண்டும் என கூறி இருக்கிறார். மாணவி ஜீன் ஜோசப்பின் கணவர் நாகர்கோவில் மாநகர துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.