1. Home
  2. தமிழ்நாடு

சேலத்தில் பரபரப்பு..! பற்றி எரிந்த பேருந்து- கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்..!!

Q

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கலியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்தவுடன் திடீரென தீப்பிடித்து எறியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

இந்நிலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில், சின்னாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like