காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு..!
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி அனந்தன், தெலுங்கானா - புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குமரி அனந்தனுக்கு "தகைசால் தமிழர் விருது' வழங்க தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை குமரி அனந்தனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளார்.