1. Home
  2. தமிழ்நாடு

சீனியர் சிட்டிசன்களுக்கு பண பிரச்சனையே வராது..! இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் 21 லட்சத்துக்கு மேல் பணம் கிடைக்கும்..!

1

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சிறந்த திட்டமாகும். இது மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டம் தபால் நிலையங்கள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு முதலீட்டுத் திட்டமாகும். ஓய்வுக் காலத்தில் மூத்த குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்ற திட்டங்களை விட அதிகமாக உள்ளது. அதேபோல, இதில் கிடைக்கும் வருமானத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

இத்திட்டத்துக்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 1,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதிகபட்ச தொகை ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டுக் கால அளவு 5 ஆண்டுகள். நீங்கள் விரும்பினால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைப்பது இத்திட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளில் ரூ. 21,15,000 பெற முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி 8.2 சதவீதமாக இருக்கும் நிலையில் நீங்கள் அதிகபட்சம் ரூ. 30 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்:

ஆண்டுக்கான வட்டி : ரூ. 2,46,000
5 ஆண்டுகளில் வட்டி: ரூ. 12,30,000
மொத்த ரிட்டன் : ரூ. 30,00,000 (முதன்மைத் தொகை) + ரூ. 12,30,000 (வட்டி) = ரூ. 42,30,000
வரி விலக்குக்குப் பிறகு, உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது தோராயமாக ரூ. 21,15,000 வரை இருக்கும்.

Trending News

Latest News

You May Like