1. Home
  2. தமிழ்நாடு

செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம் : இபிஎஸை விமர்சித்த ஓபிஎஸ்

1

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைய வேண்டும் என்பதுதான் கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனநிலையாக உள்ளது. இதனைத் தான் அதிமுகவில் 9 முறை சட்டமன்ற உறுப்பினர், தலைமை நிலையச் செயலாளர், அமைப்புச் செயலாளர், அமைச்சர் பொறுப்புகளை வகித்த செங்கோட்டையன் வெளிப்படுத்தினார். கட்சி ஒன்றுபட வேண்டும் என்று அவர் பேசியதை யாரும் தவறு என்று சொல்லவில்லையே?

இதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கம் செய்துள்ளது சர்வாதிகாரத்தின் உச்சம். சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அதிமுக இணையக் கூடாது என்று நினைக்கும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமிதான்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார். 10 நாட்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அதன்பிறகு கருத்து சொல்கிறேன் என்ற அவர், அதிமுக தொடர் தோல்விகளை சந்திக்க பிரிந்துபோய் கிடப்பதே காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

விரைவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் செங்கோட்டையன் கைகோர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கியமானதாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like