MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!
அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் உச்சமாக கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து அவர் தேவர் குருபூஜையில் கலந்துகொண்டார். அப்போது பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த இபிஎஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனால் நெருக்கடியில் இருந்து வந்த செங்கோட்டையன் அடுத்த என்ன முடிவெடுப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அவர் தவெகவில் இணைவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து பதிலளிக்க செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் சென்ற செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.