செம.. செம..! அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் வெளியாகிய முக்கிய அறிவிப்புகள்..!

தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் கூறியதாவது, "இந்த அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதியாண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகையில் குடியிருப்பு தேவை அதிகரித்து வருகிறது. எனவே இவர்களுக்காக, சென்னை சைதாப்பேட்டை தாருண்ட நகரில் 110 கோடி ரூபாய் செலவில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 190 சீர்வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நாட்டிலேயே மிகச் சிறப்பாக நிறைவேற்ற அயராது உழைத்து வரும் அரசு அலுவலர்கள் நலனைக் காப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அரசு அலுவலர்கள் தங்களது ஊதிய கணக்கை பராமரித்து வரும் தமிழ்நாட்டில் முக்கிய வங்கிகள் அரசு அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கட்டணம் இன்றி பல சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன.
அதாவது அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து மரணமடைந்தாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தரமாக பாதிக்கப்பட்டாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயது எட்டிய மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை நிதி உதவியை வங்கிகள் வழங்கும். விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் வங்கிகள் சலுகைகளை அறிவித்திருக்கின்றன. இக்குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் பள்ளி கல்வியை நிறைவு செய்து, கல்லூரியில் மேற்கல்வி பயில உதவி தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன. அரசு ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சத்தை வங்கிகள் வழங்கும். மேலும் தனிநபர் வங்கி கடன், வீட்டு கடன், கல்வி கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது உரிய வட்டி சலுகைகளை வழங்கிட முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன. அரசு அலுவலர்களுக்கு இந்த காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 நிதி ஆண்டு முதல் வழங்கிட முன்புறம் வங்கியுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும். இதன் மூலம் குறித்த காலத்திற்குள் இந்த பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்கு கிடைத்ததை தமிழ்நாடு அரசின் கருவூலத்துறை உறுதி செய்யும்" என்று கூறியுள்ளார்.