1. Home
  2. தமிழ்நாடு

செம உத்தரவு.. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தக்கூடாது !!

செம உத்தரவு.. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தக்கூடாது !!


வாகன தணிக்கை, வாகன சோதனை உள்ளிட்ட பணிகளின்போது அதிகம்பாதிக்கப்படுவது வாகன ஓட்டிகள் தான். இதுபோதாது என்று போலீசார் சில இடங்களில் திடீரென வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். இது அவசரமாக அலுவலகம் செல்வோர் அல்லது வேறு பணிக்கு செல்பவர்களுக்கு பெரிதும் இடையூராக உள்ளது.

இந்த நிலையில், இதுபோன்று வாகன சோதனைக்கு டி.ஜி.பி. கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பிரவீன்சூட். இவருக்கு ட்விட்டர் மூலமாக பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீவஸ்தவ் வாஜபேயம் என்பவர் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நீங்கள்(அதாவது டி.ஜி.பி. பிரவீன்சூட்) இருந்த போது, நகரில் தேவையில்லாமல் வாகனங்ளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி இருந்தீர்கள்.

தற்போது நீங்கள் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக உள்ளீர்கள். இதற்கு முன்பு நீங்கள் பெங்களூருவில் பிறப்பித்திருந்த உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதுபற்றி உங்களது கருத்தை தெரிவிக்கும்படியும் ஸ்ரீவஸ்தவ் கூறி இருந்தார்.

செம உத்தரவு.. ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தக்கூடாது !!

இதற்கு ‘மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ட்விட்டர் பதிவு மூலமாக பதில் அளித்துள்ளார். பெங்களூருவில் தேவையில்லாமல் ஆவணங்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டி.ஜி.பி.யின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அவசமாக அல்லது அத்தியாவசிய தேவைக்காக செல்லும்போது காவல்துறையினர் வேண்டுமென்றே ஆவணங்கள் சரிபார்ப்பு எனக்கூறி அலைக்கழிப்பதாகவும், முன்விரோதம் உள்ளவர் என்றால் போலீசார் இதனை சாக்காக வைத்து பழிவாங்குவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில் டி.ஜி.பி. பிரவீன் சூட் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like