செம..! இனி தமிழகத்தில் மின்சார தடைக்கு வாய்ப்பே இல்லை..!

நிலக்கரியின் மூலம் தான் அதிக அளவிலான மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆனால் நிலக்கரியின் இருப்பு குறைந்து வருவதனால் அரசு மாற்று ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் மிகவும் பயனுள்ள வகையில் அதிக அளவிலான மின்சார உற்பத்திக்கு உதவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய 2 தேதிகளில் ஐந்தாவது சர்வதேச மாநாடு ”Windergy India 2023” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகள், தொழில் துறையினர், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த காற்றாலை மின்சார உற்பத்தியின் மூலம் நெட் ஜீரோ எனப்படும் கார்பன் வெளியேற்றம் இல்லாத மின்சார உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவருமான ராஜேஷ் லக்கானி அவர்கள் Tangedco கடலில் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இதன் மூலம் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே தமிழகத்தில் தான் காற்றாலை மின்சார உற்பத்தி திறனில் முதலிடத்தில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.