1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலைக்கு சவால் விடுத்த செல்வபெருந்தகை..!

1

நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா? என செல்வபெருந்தகை சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நிருபர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: 

அண்ணாமலை  ஐ.பி.எஸ். படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?. தலித் சமூகத்தை சேர்ந்த என்னை பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும். இந்த நாடும், சட்டமும், நீதிமன்றமும், போலீசாரும் அண்ணாமலைக்கு சொந்தம் என நினைக்கிறார். நான் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமின் கிடைக்குமா?.

ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது. தலித் சமூகம் மற்றும் ஏழை, எளிய மக்கள் என்றால் அண்ணாமலைக்கு யாரு என்று தெரியாது. தமிழக பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மீது மொத்தம் 834 வழக்குகள் உள்ளது. இதில் 124 குற்ற வழக்குகள். 

ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா?. வாய் இருக்கிறது என்பதற்காக அவதூறாக பேசினால், சட்டம் பாயும் என அண்ணாமலைக்கு தெரியாதா?. 

அரைகுறையாக அரசியல் படித்து விட்டு பேசும் அண்ணாமலை என்ன பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும். பா.ஜ.க.  ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like