1. Home
  2. தமிழ்நாடு

செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு : பென்னிகுவிக் கல்லறையை சீரமைக்க நிதி திரட்டப் போகிறேன்..!

1

குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், செல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான செல்லூர் ராஜு, பென்னிகுவிக் கல்லறை முன்பாக நின்றுப் பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது சொத்துகளை விற்று அணைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு கல்லறை நிதித் திரட்டி, சீரமைக்கவிருப்பதாகவும், பென்னிகுவிக் கல்லறையை சீரமைக்க தி.மு.க. வாக்கு கொடுத்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.கல்லறை அருகில் பென்னி குயிக் சிலையை அமைக்க உரிய நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் அதற்கான பணத்தை கட்டவில்லை என்று சர்ச் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்கி தந்தவருக்கு இப்படி ஒரு நிலையா? என்று எண்ணி பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. இதற்கான சீரமைப்பு வேலைகளை தமிழக அரசு செய்யாவிட்டால், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து நானே முன் நின்று நிதி ஒதுக்கீடு செய்து வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இன்று இருந்திருந்தால், அவரிடம் இந்த கோரிக்கை வந்திருந்தால் உடனடியாக செய்து கொடுத்திருப்பார். இருப்பினும் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் போது நிச்சயம் செய்து கொடுப்போம். அதற்கு முன்னதாக என்னுடைய முயற்சியால் மக்களை திரட்டி, அவர்களிடம் நிதி வசூல் செய்து பென்னி குயிக் கல்லறை மற்றும் சிலையை சீரமைப்பேன் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like