அமைச்சர் தா.மோ.அன்பரசனையும், அண்ணாமலையையும் வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு..!
மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேடையில் பேசுகையில், “திமுகவை பட்டி தொட்டி எங்கும் இன்றைக்கு 50 வயதை கடந்த அனைவரையும் அறியச் செய்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இந்தக் கட்சியைத் தொடங்கியது நானாக இருக்கலாம்.! ஆனால், இதைப் பட்டி தட்டி எங்கும் வளர்த்தெடுத்தது எனது அருமை தம்பி எம்.ஜி.இராமச்சந்திரன்’- என அண்ணாவே கூறியுள்ளார்.
67-இல் ஆட்சியைப் பிடித்தவுடன் அண்ணா எனக்கு மாலை மரியாதை போடுவதை விட ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள எனது தம்பி எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு அணிவியுங்கள் இந்த வெற்றிக்கு அவன் தான் காரணம் எனக் கூறியவர் அண்ணா. இன்றைக்கு நடிகர் என்று கூறுகிறார். திமுக அமைச்சரவையில் உள்ள த.மோ.அன்பரசன் உன்னால திமுகவை வளர்த்திருக்க முடியுமா.? உன்னுடைய தொகுதியை வளர்த்து இருப்பியா? உன்னுடைய வீட்டின் அருகாமையில் வளர்த்திருப்பியா.? திமுகவை வளர்த்தது உனக்கு என்ன தெரியும்.! இருப்பது ஒரு சந்திரன் அதேபோல ஒரு ராமச்சந்திரனால்தான் திமுகவை வளர்த்தெடுக்க முடியும். எம்ஜிஆரை யாரும் குற்றம் சொல்ல முடியாது ஒரு எளிய தலைவரை நடிகர் என்று சொல்லலாமா.? எம்ஜிஆரை ஜெயலலிதாவை இன்றைக்கு நடிகர் என்று கூறிகிறார்.! சட்டசபையில் கட்சத் தீவைப் பற்றிப் பேசும்பொழுது திமுக காரனுக்கு யாருக்கும் எந்த யோக்கியதையும் இல்லையெனக் கைநீட்டி பேசி உங்கள் தலைவரை வரச்சொல்லுங்கள் என்று கேட்டபோது திமுக சட்டமன்ற உறுப்பினராக வாயைப் பொத்திக்கொண்டு மூடிக்கொண்டுதான் இருந்தீர்கள். அன்னைக்கு உங்களுக்குத் தெரியலையா.? எங்க அம்மா நடிகை என்று.?
ஒரு நடிகையாக இப்படி பேச முடியுமா.? அதற்கு ஆளுமை திறமை வேண்டும். கலைஞர் என்ன நடிகர் இல்லையா காகிதப்பூ கதாநாயகன் தானே கலைஞர். தாமோ அன்பரசனுக்கு அரசியலே தெரியவில்லை. எதிர்க்கட்சியை விமர்சனம் செய்யும் என்ற வகையில் தன்னுடைய திமுக குடும்பத்தினரையே அமைச்சர் அன்பரசன் திட்டுகிறார். ஸ்டாலின் ஒரு நடிகர்.! அவங்க அப்பா ஒரு நடிகர்.! 1971 ஆண்டுவரை திமுக அரியணை ஏற முடிந்தது. அதிமுக தொடங்கிய பிறகு அரியணை உங்களால் ஏற முடிந்ததா.? புரட்சித்தலைவர் இருந்தவரை கோட்டை பக்கம் திமுகவினர் உங்களால் வர முடிந்ததா.?
அதைவிட பாஜகவில் தலைவராக இருக்கிறவர் நேற்று முளைத்த காளான்போல எனக்கு எப்போதுமே அவரைப் பிடிக்காது. அகில இந்திய கட்சி பாஜக அதில் மாநிலக் கட்சியின் ஒரு தலைவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். நாம என்னமோ அவரிடம் கூட்டணிக்குப் பேசினமாதிரி அவர் சொல்றாரு, இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நாங்கள் விரும்பமாட்டோம். எங்க கிட்ட கேட்டுத் தான் அதிமுக போக வேண்டும் எனக் கூறுகிறார். அந்த மாதிரி பொழப்பு வந்தா நாங்க நாண்டுக்கிட்டு செத்துப் போவோம். நீ எல்லாம் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு அதிமுக வந்து உங்களிடம் சீட்டு கேட்டு நாங்க நிக்கணுமா என்ன வாய்க்கொழுப்போடு பேசுகிறார் .? அண்ணாமலை இருக்கும் வரை பாஜக சாமியாராகத் தான் போக வேண்டும். 32 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கிய அதிமுக தான். இன்றைக்கு கீழே இருக்கிறவர்கள் மேலே வர முடியும் உன்னைப் போல உட்கார வைத்துப் பதவிக்கு வந்தவர்கள் அல்ல எடப்பாடியார்.! தொண்டனால் உட்கார வைத்து அழகு பார்க்கப் பட்டவர். எப்பேர்ப்பட்ட கட்சி பாஜகவிடம் வந்து சீட்டு கேட்க முடியுமா.? எவ்வளவு வாய்க்கொழுப்போடு அண்ணாமலை பேசுகிறார்” எனச் சரமாரியாக அமைச்சர் தா.மோ.அன்பரசனையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வெளுத்து வாங்கினார்.