கழக வளர்ச்சி பணிகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் : நிர்வாகிகளுக்கு செல்லூர் கே.ராஜூ அழைப்பு..!

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ.விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க மகளிரணி, இளைஞர் மற்றும் இளம்பாசறை குறித்தும்,அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவது, பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து நாளை மாலை 5 மணி அளவில் மதுரை பனகல் சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, பகுதி, வட்ட, அனைத்து அணி நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் என அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறார்.