1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார் - செல்லூர் கே.ராஜூ..!


அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-  

அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார். கடந்த பத்தாண்டகளாக அமைச்சராக நான் இருந்துள்ளேன். உலகத்தில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றி சிறப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் நிர்வாகம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் தமிழகத்தில் பெரும் அளவில் பரவி இருந்தாலும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.

பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுவது என்று இந்தியாவில் எடுத்துக்காட்டாக கூறினார். அவரை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் மூன்று துறைகளுக்கு அமைச்சராக  சிறப்பாக செயல்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் எத்தனையோ புயல்கள் வறட்சிகளை சமாளிச்சு சிறப்பாக நிர்வாகம் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது உள்ள தி.மு.க. ஆட்சியில் இரண்டு புயல்களுக்கு கூட தாங்க முடியவில்லை.

மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளேன். அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா..? எம்ஜிஆரின் 100 ரூபாய் நாணயத்தின்போது பிரதமர் மோடியை கூப்பிடாததற்கு காரணம், எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர்.

மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். மதவாத நிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கும்.அதன் காரணமாக பிரதமர் மோடியை எம்.ஜி.ஆரின் 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழாவிற்கு அழைக்கவில்லை. கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது தி.மு.க. அரசு. ப்ளாக் டிக்கெட் போன்று அதிக தொகைக்கு விற்பனை செய்கின்றனர். நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசி வருகிறார். கடவுளை கண்டவரும் இல்லை. எம்.ஜி.ஆர்.ஐ வென்றவரும் இல்லை, என்றும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்.

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வருவதற்கு முழுமையாக காரணம் ஜெயலலிதா. வெளிமாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like