1. Home
  2. தமிழ்நாடு

இந்த படத்தை ஆஸ்கர் விருதிற்கு தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது: ஜெயக்குமார்!

1

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா உள்ளிட்ட கதையும்-கருத்தும்-தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்காக பட்டியலில் இருந்தும் இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்தி திரைப்படமான ‘லாபதா லேடீஸ்’ பல்வேறு கருத்துக்களை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப்பூர்வமாக இல்லை என்பதே உண்மை. என்ன மொழியில் படம் உள்ளது என்பதை பார்க்காமல் திரை மொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்த படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம். இந்தியாவில் மட்டும் தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்று விடுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like