பள்ளி மாணவர்களுக்கு தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு !!
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு !!

தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகளின் கீழ் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மதிப்பெண் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனினும் ஊரடங்கு தளர்வுகள் இருப்பதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மதிப்பீட்டு தேர்வு நடத்த உத்தரவிட்டு இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் , மொழிப்பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3.15 வரையும், இதர பாடங்கள் மதியம் 2 மணிக்கு தொடங்கி 3 மணி வரைக்கும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன., 5ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடம்; 6 ஆங்கிலம்; 7, கணிதம்; 8ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம்; 10ஆம் தேதி அறிவியல், 11ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடத்தப்படும் என, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in