1. Home
  2. தமிழ்நாடு

Sekhmet கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து : நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!

1

ஆழ்வார்பேட்டையில் பிரபல தனியார் கேளிக்கை விடுதியில் மேற்கூரை திடீரென எழுந்து விழுந்துள்ளது.

இதில் அந்த கிளப்பில் பணியாற்றிய ஊழியர்கள் மூன்று பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனவும் மற்றவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவரே எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள Sekhmet கேளிக்கை விடுதியில் நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த தனது தம்பி உயிரிழப்புக்குக் காரணமாக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்டீபன் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்


 

Trending News

Latest News

You May Like