1. Home
  2. தமிழ்நாடு

சிறந்த திரைப்படம் விருதை தட்டி சென்ற சீதா ராமம் திரைப்படம்..!

1

இந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருதுகளில் ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா (IFFM) விருது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த இந்திய திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி 14வது மெல்போர்ன் இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்குள்ள பிரபல ஹேமர் அரங்கில் கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிறந்த திரைப்படத்திற்கான விருது துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.அனாதையான எல்லை காக்கும் போர் வீரன் மற்றும் காதலுக்காக தனது ஆடம்பர வாழ்க்கையும் இழக்க துணிந்த பெண்ணின் காதலை கூறும் திரைப்படம் தான் சீதா ராமம்.

சாதி, மதம் கடந்து வரலாற்று காதல் காவியமாக கொண்டாடப்பட்ட இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஓடி சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட சிறந்த படத்திற்கான விருதினை சீதா ராமம் பட இயக்குநர் ஹனு ராகவபுடி பெற்றுள்ளார்.

விருது பெற்றவர்கள் விவரம்

  • சிறந்த ஆவணப்படம் ; To Kill A Tiger
  • சிறந்த இந்தி திரைப்படம்  ; Agra
  • சிறந்த திரைப்பட நடிகர் ; Mohit Agarwal, Agra
  • சிறந்த திரைப்பட நடிகை ; Rani Mukerji, Mrs Chatterjee Vs Norway
  • சிறந்த இயக்குனர் ; Prithvi Konanur – Hadinelentu, Seventeeners
  • சிறந்த திரைப்படம் ; Sita Ramam
  • சிறந்த தொடர் நடிகர் ; Vijay Varma, Dahaad
  • சிறந்த தொடர் நடிகை ; Rajshri Deshpande, Trial By Fire
  • சிறந்த தொடர் ; Jubilee
  • மக்கள் தேர்வில் சிறந்த குறும்படம் ; Connection Kya Hain
  • ஆஸ்திரேலியா சிறந்த குறும்படம் ; Home

கெளரவ விருதுகள்

  • சமத்துவம் பேசும் திரைப்படம் ; Darlings
  • மக்கள் தேர்வு விருது ; Pathaan
  • வாழ்நாள் சாதனையாளர் கெளரவ விருது ; Karan Johar
  • இந்திய சினிமாவின் வருங்கால சூப்பர் ஸ்டார் ; Kartik Aaryan
  • சினிமா பன்முகத்தன்மை விருது  ; Mrunal Thakur
  • ரெயின்போ கதைகள் விருது ; Onir,Pine Cone

Trending News

Latest News

You May Like