1. Home
  2. தமிழ்நாடு

சீமான் பரபரப்பு பேட்டி..! சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை..!

1

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி தேசிய மாணவ படை முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல் துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் 

இந்நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பேசிய சீமான், சில நாட்களுக்கு முன் வருத்தம் தெரிவித்து சிவராமன் எனக்கு கடிதம் எழுதி இருந்தார் என கூறியுள்ளார். 

மேலும், அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார் எனவும், சிவராமனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like