சீமானால் வந்த வினை..! நெல்லை தாசில்தார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்! சீமானால் வந்த வினை..!
நம் நாட்டை பொறுத்தவரை அரசு அலுவலர்கள், அரசு அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து செயல்பட கூடாது. இவ்வாறு சேர்ந்து செயல்படும்போது அவர்கள் தங்களின் கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் தான் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து செயல்பட தடை உள்ளது.
இத்தகைய சூழலில் தான் திருநெல்வேலியில் பணியாற்றி வரும் சிறப்பு தாசில்தார் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதாவது திருநெல்வேலியில் நிலம் கையப்படுத்தும் பிரிவில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாசில்தாராக இருந்தார். அதன்பிறகு நாங்குநேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராக பணியாற்றினார். தற்போது திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறையில் நிலம் கையப்படுத்தும் பிரிவின் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் செல்வக்குமார் தனது பெயரை மாற்றி நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்ததாககூறப்படுகிறது. அதோடு நாம் தமிழர் கட்சியில் மண்டல செயலாளராகவும் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் சீமான் தலைமையில் திருநெல்வேலியில் மாவட்ட அளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் செல்வக்குமார் பங்கேற்றுள்ளார். அதன்பிறகு கடந்த 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலியில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். சீமான் அருகே அவர் அமர்ந்திருந்தார். இந்த போட்டோ என்பது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதுதொடர்பாக திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார் செல்வக்குமார் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.