1. Home
  2. தமிழ்நாடு

நாளை 40 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துகிறார் சீமான்..!

1

நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களை, ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்வுக்கு தலைமை வகித்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.  

அதன்படி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நாளை 23-ம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது.  

முன்னதாக பிரச்சாரத்துக்கான களப்பணிகளை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதற்காக போட்டியிட இருக்கும் 40 வேட்பாளர்கள் மற்றும் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாநகரில் 21-ம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,  

எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள். ஒரு கட்சியை தேசிய கட்சியாக எதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.

 எதனை வைத்து மதிப்பீடு செய்கிறது. எங்களது கட்சியை வேறு ஒருவருக்குக்கு கொடுத்துள்ளீர்களே. அவர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிட்டுள்ளாரா. உரிய வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளாரா. 

தமிழகத்தில் மூன்று கூட்டணி உள்ளது. ஒரே ஒரு கட்சி மட்டும்தான் தனி அணி. அவர்கள் எல்லாரும் என்னை குறிவைப்பார்கள். ஆனால் நான்தான் எல்லாரையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறேன். 

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like