காம வெறியன் சீமான்! தமிழகத்தில் முளைத்த போஸ்டர்கள்..!
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியார் குறித்து அவர் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீமான் மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திராவிடர் பெரியார் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்," சினிமா நடிகையை சீரழித்து ஏழு முறை கருக்கலைப்பு செய்த காம வெறியன் சீமானே! தரம் தாழ்ந்த அரசியல் செய்யாதே! தமிழ்நாடு உன்னை மன்னிக்காது" என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களிலும் பெரியார் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.