1. Home
  2. தமிழ்நாடு

சீமான் சர்ச்சை பேச்சு : "தமிழை சனியன் சொன்னவர் பெரியார்.." - தாய், மகளுடன்...

11

தந்தை பெரியார் பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.

சீமான் கடலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் தேசியத்தின் சிதறிய எச்சில் தான் திராவிடம். நான் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவன். இந்தியா நிலப்பரப்பு முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் தான் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதை ஏற்கிறீர்களா? இல்லையா? இந்த நாட்டை என் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரேயொரு இனத்துக்கு தான் உரிமை உண்டு. அது தமிழர்களுக்கு தான் என்று சொன்னதை ஏற்கிறீர்களா? இல்லையா? அவர் ஏன் திராவிடர்கள் என்று சொல்லவில்லை.உலகின் முதல் மொழி தமிழ் என்றால் மூத்த மாந்தன் தமிழன் தானே. இதனை நாட்டின் முதன்மை அமைச்சர் மோடியே ஊர் ஊராக போய் சொல்லி வருகிறார். அப்படியென்றால் இடையே திராவிடம் எங்கே வருகிறது. முதலில் திராவிடம் என்பது தமிழ் சொல்லா?
 

தமிழ் ஒரு காண்டுமிராண்டி மொழி. தமிழ் தாய்க்கு கொம்பா இருக்கு? தமிழ் தாய் மூவாயிரம் ஆண்டுகளாக என்ன படிக்க வைத்தார்? என்று கேட்டவர் பெரியார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பட்டு, பரிபாடல், சங்க இலக்கியங்களை எல்லாம் எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் தமிழ் படிக்கவில்லையா? தமிழை சனியன் என்று சொன்ன பெரியார் எந்த மொழியில் எழுதினார்? தமிழில் தானே எழுதினார்.

எங்கள் மொழியையே இழிவாக பேசிவிட்டு அப்புறம் என்ன சமூக மாற்றம், சீர்த்திருத்தம், அரசியல் இருக்கு? அடிப்படையே தவறாக இருக்கிறது. என்னுடைய ஆகச்சிறந்த வாழ்வியல் நெறியாக திருக்குறள் உள்ளது. அதனை கழிவு என்று சொல்லிவிட்டீர்கள். கம்பன் ஒரு எதிரி. இளங்கோவடிகள் ஒரு எதிரி. திருவள்ளுவர் ஒரு எதிரி. என்னுடைய எல்லாவற்றையும் குப்பை என்று சொன்னவர் பெரியார். அவரை கொள்கை வழிகாட்டி என்று எப்படி சொல்ல முடியும்.

உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா?. மதுவுக்கு எதிராக 1000 தென்னை மரங்களை வெட்டினார். அவரை பகுத்தறிவுவாதி என்று தானே சொல்கிறீர்கள். என் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று சொல்வது தான் அறிவு உள்ளவரின் செயல். மரத்தை வெட்டி சாய்த்தது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. மது குடிக்க வேண்டாம் என்பது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சமூக நீதிக்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கா? சமூகநீதியை போராடி பெற்றுக்கொடுத்தது பெரியாரா? ஆனை முத்துவா?'' என்று கடுமையாக சாடியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய இந்த கருத்துக்கு திராவிடர் கழகம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like