1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஆதரவாகக் கொந்தளித்த சீமான்!

Q

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசுப் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள். ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like