1. Home
  2. தமிழ்நாடு

உள்ளே அவ்ளோ இடம் இருக்கு ஏன் பா தொங்கிட்டு வரேன்னு கேட்ட நடத்துனரை எப்படி மிரட்டுறான் பாருங்க..!

1

சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின்போது, பள்ளி மாணவர்கள் உள்ளே இடமிருந்தும் வெளியிலேயே குரங்கு போல தொங்குவதும், அப்படியே உள்ளே ஏறினால் கத்தி கூப்பாடு போட்டு பிற பயணிகளின் நிம்மதியைக் கெடுப்பதுமாய் இருப்பது வழக்கம். 

இந்த நிலையில் பேருந்தில் பயணித்த மாணவன் தொங்கியவாறும், ஒரு காலை சாலையில் வைத்து தேய்த்தபடியும் வருவதை பார்த்து கோபமடைந்தார் நடத்துனர். அதனால், மேலே ஏறி வாப்பா என கூறியதற்கு ணோவ்.. மேலலாம் கை வைக்காத என கூறியதோடு, நடத்துனரை கண்டபடி பேசியுள்ளார். மாணவர்கள் மீது கை வைத்தால் விபரீதமாகும் என கணித்த நடத்துனர், என்ன சொல்வதென்றே தெரியாமல் அவமானத்துடன் உள்ளே சென்றார்.

மாணவர்களை தண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை.. பிள்ளைகளை தண்டிப்பதற்கு பெற்றோருக்கும் உரிமை இல்லை.. பொது வெளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அதைக் கேட்பதற்கு ஒருவருக்கும் உரிமையில்லை என்றால் மாணவர் சமுதாயத்தை வழிநடத்தும் உரிமை யாருக்குத்தான் உள்ளதோ? 

Trending News

Latest News

You May Like