1. Home
  2. தமிழ்நாடு

உங்களின் ஒரு சிறு தவறு மற்றவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது பாருங்க..!

1

நாமக்கல் அடுத்த வளையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 30 ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவியுடன் தங்கி இருந்த சரவணன் 31-ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதற்காக நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் அருகே சென்ற போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காரில் இருந்த பெண் ஒருவர் பின்னால் வாகனம் வருவதை கவனிக்காமல் திடீரென தனது காரின் கதவை திறந்தார்.


அதில் மோதிய சரவணன் சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் ஆகஸ்ட் 31 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து

இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த நாமக்கல்லை சேர்ந்த மருத்துவர் சித்ரா என்பதும் சாலையின் இருபுறங்களிலும் பார்க்காமல் அலட்சியமாக காரின் கதவை திறந்ததே காரணம் என்பதும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சரவணன் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Trending News

Latest News

You May Like