1. Home
  2. தமிழ்நாடு

ஒடிஷா பாலசோரில் 144 தடை அமல்..!

1

 ஒடிஷாவில் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் இரத்தத்தை சாலையில் வழிந்தோடவிட்டதாக குற்றஞ்சாட்டி திங்களன்று(ஜூன் 17) அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்னா நடத்தினர்.

அப்போது தர்னாவில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்குமிடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒடிஷாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மஜ்ஜி, பாலசோர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு, அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். பாலசோர் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like