1. Home
  2. தமிழ்நாடு

தலைநகர் டெல்லியில் அமலாகும் 144 தடை உத்தரவு..!

1

டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அனைவரும் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு இடையே உள்ள எல்லைகள் மற்றும் வடகிழக்கு மாவட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூட கூடாது என டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு டெல்லி எல்லையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போராட்டத்தன்று நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும் காவல்துறை சார்பில் ஏகப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வரும் டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், பேருந்துகள், டிரக்குகள், வணிக வாகனங்கள் ஆகியவை நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லி எல்லையை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது வருமாறு:சில விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை (பிப்.13) தில்லியில் பேரணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கிடைத்தது. வேளாண் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வமான அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தில்லியில் அமா்ந்து போராட்டம் நடத்துவாா்கள் எனவும் தகவல் கிடைத்தது.இதையொட்டி, தில்லியில் குறிப்பாக வடகிழக்கு தில்லி பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 144-ஆவது பிரிவின்படி தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்டை மாநிலங்களிலிருந்து தில்லிக்கு விவசாயிகள்அணி திரண்டால் அதைத் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸாா் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனா்.இதே போன்று பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் ‘தில்லி சலோ பேரணி’யை முறியடிக்கும் விதமாக அம்பாலா, ஜிந்த், ஃப்தேஹாபாத் போன்ற மாவட்ட எல்லைகளை மூடுவதற்கு விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஹரியாணாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவை ரத்து, குறுஞ்செய்திகளுக்கான தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், ‘தில்லி சலோ’ பேரணியை பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் மறுத்துள்ளன. அகில இந்திய கிசான் சபை பொதுச் செயலாளா் ஹன்னன் மொல்லா உள்ளிட்ட விவசாய சங்கங்களின் தலைவா்கள், ‘இந்தப் பேரணிக்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை’ என்றனா்.

Trending News

Latest News

You May Like