இன்று முதல் செப் 15 வரை நொய்டா முழுவதும் 144 தடை அமல்..!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் செப் 6 ஆம் தேதி ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து பல பண்டிகை நாட்கள் வரவுள்ளதால் பாதுகாப்பு கருதி நொய்டாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், இன்று ( செப். 6) முதல் செப் 15 ஆம் தேதி வரை நொய்டா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். இந்த உத்தரவு அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தராவை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திவுள்ளது.