1. Home
  2. தமிழ்நாடு

ரூ.5000 கோடி செலவில் 2‑வது திருமணம்..!

1

உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். 60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.

தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023‑ல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். திருமணமானது ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -ல் வைத்து நடைபெறுகிறது.

இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். வரும் 28-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. 

ரூ. 5 ஆயிரம் கோடி செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019‑ம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.  ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட்வை கடந்த 2018‑ம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

Trending News

Latest News

You May Like