விஞ்ஞானிகள் அதிர்ச்சி..! நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் ஜப்பானின் முயற்சி தோல்வி..!

ஜப்பானின் தனியார் நிறுவனமான ஐஸ்பேஸ், நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆளில்லா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
சுற்றுப்பாதையில் இருந்து ரெஸிலியன்ஸ் விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் பணியை ஐஸ்பேஸ் விஞ்ஞானிகள் இன்று அதிகாலை மேற்கொண்டனர். தரையிறக்கும் பணியின் கடைசி கட்டத்தில் விண்கலம் தொடர்பை இழந்தது. இது ஐஸ்பேஸ் விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக நேரலை நிறுத்தப்பட்ட நிலையில், விண்கலத்தின் விபரம் பற்றி ஐஸ்பேஸ் நிறுவனம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததாக கருதப்படுகிறது.
விரைவில் இது குறித்து ஆய்வு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐஸ்பேஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.