1. Home
  2. தமிழ்நாடு

ஜனவரி 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில், எல்லா சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் மிக விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இந்த திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று அழைக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பழம்பெருமை வாய்ந்த மரகத நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா சிறப்பு தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.

இந்த கோவிலில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் உடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் என்ற சிறப்புகளை இக் கோவில் கொண்டுள்ளது. இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவர் இக்கோவில் மங்கள நாதர் என புராணங்கள் தெரிவிக்கிறது. இங்குள்ள அம்மன் மங்கள நாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவளாக அருள் பாலிக்கிறார்.இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 ஆம் தேதி உழவர் திருநாள் என ஏற்கனவே மூன்று நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் ஜனவரி 13 ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து 6 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like