1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மிக கனமழை - 11 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை..!

1

இன்றைய தினம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தடையின்றி தொடரும். தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு இயக்க வேண்டும். இல்லையெனில் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மிக கனமழை எச்சரிக்கையை ஒட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்றைய தினம் (அக்டோபர் 16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like