1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அதிரடி அறிவிப்பு!


அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் ஒன்றுவிட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்ததால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை மாநில அரசு ஒத்திவைத்தது. ஆந்திராவில் கடந்த மாதம் வரை தினசரி 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது ஆந்திராவில் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினர். அப்போது, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று ஜெகன்மோகன்ரெட்டி உத்தரவிட்டார்.

1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளில் பாடங்கள் நடைபெறும், 2, 4, 6, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த நாள் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். பள்ளியில் 750க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தினார்.

பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும் என்றும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும் என்றும்,நிலைமையை பொறுத்து டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் ஆந்திர முதல்வர் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like