1. Home
  2. தமிழ்நாடு

தொடர் விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு - இனி விடுமுறை இல்லை ..!

1

2023 – 24 ஆம் கல்வி ஆண்டு தற்போது மூன்றாம் பருவத்தில் உள்ளது. டிசம்பர் மாதம் நடந்த அரையாண்டு தேர்வுகளுக்கு பின்னர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு பின்னர் ஜனவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களுக்கான அரையாண்டு தேர்வுகளும் ஜனவரியில் நடத்தப்பட்டது.

அதன் பிறகு 10, 11, 12 ம் வகுப்பு ஆகிய பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தற்போது திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகின்றன. தற்போது ஜனவரி 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தைப்பூசம், குடியரசு தின விழா மற்றும் வார இறுதி நாட்கள் என்று மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஜனவரி 29ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதன் பின்னர் பிப்ரவரி மாதத்தில் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடத்தப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.

இதனால் இனிவரும் நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறைகள் எதுவும் அளிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இனிவரும் நாட்களில் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியது அவசியமாகும். பொதுத்தேர்வுகளை தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் கோடை கால விடுமுறைக்கான அறிவிப்பு தெரிவிக்கப்படும்.

Trending News

Latest News

You May Like